அகஸ்தியர் கூடம் ட்ரெக்கிங்
அகஸ்தியர் மலைச்சிகரம் அல்லது அகஸ்தியர் கூடம் என்றழைக்கப்படும் இந்த சிகரம் 1868 மீட்டர் உயரத்தைகொண்டுள்ளது. திருவனந்தபுரம் பகுதியில் இதுவே மிக உயர்ந்த மலைச்சிகரமாகும். இயற்கை ஆர்வலர்களுக்கு கண்ணுக்கு விருந்து படைக்கும் பசுமை காடுகள், 2500க்கும் அதிகமான மூலிகை செடிகள், கண் கவரும் அருவிகள் அடங்கிய ஒரு ட்ரெக்கிங் பாரடைஸ் ஆக இருக்கிறது.
தாமிரபரணி ஆறு, கரமனா ஆறு மற்றும் நெய்யார் ஆறு போன்றவை இந்த மலையிலிருந்துதான் உற்பத்தியாகின்றன. இது ஹிந்துக்களின் முக்கியமான புனித யாத்திரை ஸ்தலமாகவும் விளங்குகிறது. அகஸ்தியர் முனிவர் இந்த மலைக்கு வந்து தவம் இருந்ததாக சொல்கிறார்கள்.

கண்ணுக்கு விருந்தான இயற்கை காட்சிகள் எங்கோ கனவில் காண்பது போன்று
இருக்கிறது. கணினியில் நாம் காணும் ஸ்கிரீன் சேவர்களையும் விஞ்சும் அழகிய
காட்சிகள் வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாத அழகு. நம் மூச்சு குழலின் வழியே நுரையீரலை
நிறைக்கும் சுவாச காற்றின் தரமோ எங்குமே கிடைக்காத அளவு சுத்தமாக இருக்கிறது. 56
கிலோ
மீட்டர் தூரத்தை மூன்று நாட்களில் அதுவும் கடினமான மலை பாதைகளில், பாறைகளில் ஏறி
இறங்கி இருக்கிறோம் என்பதை திரும்பி வந்த பிறகு நினைத்து பார்த்தால் மலைப்பாக
இருக்கிறது.
டிவைன் ட்ரெக்கர்ஸ் என்ற எங்கள் மலையேற்ற குழுவில் இந்த முறை
எதிர்பார்த்ததை விட அதிகமான அளவு நண்பர்கள் இணைந்து கொள்ள அகஸ்தியர் கூடம் செல்லும் எங்கள் குழுவை ஐந்தாக பிரித்து முன் பதிவு செய்தார் எங்கள் கேப்டன் ராஜீவ்.
சில ஆண்டுகள் முன்பு வரை வனத்துறைக்கு நம்முடைய விருப்ப விண்ணப்பத்தை தபாலில் அனுப்ப வேண்டும். அவர்களுக்கு நம்முடைய விண்ணப்பம் சென்று சேர்ந்து விட்டதா என்பதை தொலைபேசியில் நாம் தான் அழைத்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஆனால் இன்றைய டிஜிட்டல் உலகத்தில் எல்லாம் கணினி மயமாகி விட்டது. ஜனவரி மாதம் ஒரு குறிப்பிட்ட தேதியில் ரயில்வே தட்கல் டிக்கட் போன்று காலை 11.00 மணிக்கு திறக்கப்படும். உலகம் முழுவதும் இருந்து யார் வேண்டுமானாலும் உடனடியாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஆன்லைனிலேயே பணமும் பெற்று நமக்கான ஸ்லாட் கூப்பனையும் கொடுத்து விடுகிறார்கள். ஒரு நாளைக்கு 100 பேர் மட்டுமே அனுமதிக்க படுவர் என்பதால் கடுமையான நெருக்கடி. மனிதர்களை அளவாக அனுமதிப்பதால் காடு அழகாக இருக்கிறது.

ஆன்லைனில் திறந்து விட்ட பதினைந்து நிமிடங்களிலேயே இந்த சீசனுக்கான
எல்லா டிக்கட்டுகளும் விற்று தீர்ந்து விட்டது. அகஸ்தியர் கூடம் சீசன் என்பது
வருடத்தில் பொங்கல் நாளான ஜனவரி 14 முதல் மார்ச் 10 ஆம் தேதி வரை இருக்கும். நபர் ஒருவருக்கு 500 ரூபாய்
வசூலிக்கிறார்கள். மற்ற நாட்களில் ஆப் சீசன் பாஸ் என்று கொடுக்கிறார்கள். ஐந்து
நபர் கொண்ட ஒரு குழுவுக்கு 7500 ரூபாய் வசூலிக்கிறார்களாம்.
கோவை நண்பர்களுக்கு மூன்றாவது குழுவாகவும் பிப்ரவரி 17 ஆம்
தேதி முதல் 19 தேதி வரையும் ட்ரெக்கிங் செல்ல அனுமதி கிடைத்தது. 16 ஆம் தேதி மாலை
திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயிலில் எல்லோரும் ஏறி அதிகாலை 3.30 மணிக்கு
திருவனந்தபுரம் அடைந்தோம்.
திருவனந்தபுரத்தில் இருந்து போனக்காடு செக் போஸ்டுக்கு 60 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். எங்களுக்கான சொகுசு வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் எங்கள் கேப்டன். விடிந்தும் விடியாமலும் இருக்கும் போதே செக் போஸ்ட் சென்று சேர்ந்து விட்டோம். வழியில் எங்களுக்கான காலை உணவு ஏற்கனவே திட்டமிட்டபடி பார்சல் செய்யப்பட்டு தயாராக இருந்தது. அதையும் எடுத்துகொண்டு எங்களை சரியான நேரத்திற்கு போனக்காடு செக்போஸ்டில் இறக்கி விட்டு விட்டு சென்றது அந்த வேன்.

செக்போஸ்டிலேயே சுகாதாரமான கழிப்பிடம் குளிக்கும் வசதியை வனத்துறையினர்
செய்து வைத்திருந்தனர். காலை கடன்களை மட்டும் முடித்து விட்டு பயணத்தை துவக்கலாம் வழியில்
தென்படும் அருவிகளில் குளித்து கொள்ளலாம் என்று எங்களுக்கு அறிவுறுத்த
பட்டிருந்ததால் வனத்துறையின் செக் போஸ்டில் நாங்கள் வந்து விட்டோம் என்று ரிப்போர்ட் செய்தோம். எங்கள் அனுமதி சீட்டுகள் சரிபார்க்க பட்டு கொண்டு செல்லும் பைகளில் மதுபுட்டிகள் பிளாஸ்டிக் பைகள் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதாவது உள்ளனவா என்று ஆராயப்பட்டு பின்னர் உள்ளே செல்ல அனுமதித்தனர்.
இந்த பயணத்திற்காக வனத்துறையினரால் நடை பாதை ஒழுங்கு செய்ய பட்டிருந்தது. சீசன் இல்லாத காலங்களில் பாதைகளில் விழுந்த மரங்கள் யானைகளால் தள்ளி விடப்பட்ட மரங்கள் யாவும் சீராக வெட்டி எடுக்கப்பட்டிருந்தது. மிக கடினமான
பயணம் என்பதால் பதினான்கு வயதை தாண்டிய ஆண்கள் உடல் திடம் மிக்கவர் மட்டுமே ட்ரெக்கிங்
செல்ல அனுமதிக்கப்பட்டனர். குழுவாக மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். தனிநபர்களுக்கு அனுமதி இல்லை. பெண்கள் செல்ல அனுமதிக்க படவில்லை.
போனக்காடு செக் போஸ்டை தாண்டி செல்லும்போது மிக நீண்ட காட்டு பயணம் செல்லும் உற்சாகம் எல்லோர் முகத்திலும் தாண்டவமாடியது. உள்ளே நுழைந்தவுடன் கையில் ஸ்மார்ட் போன் கேமரா இருக்கும் உற்சாகத்தில் எல்லோரும் பி சி ஸ்ரீராம்களாக மாறித்தான் போனோம். காடு பசுமை போர்வை போர்த்தி அழகாக போஸ் கொடுத்தது.
செல்லும் வழி நெடுகிலும் வானுயர்ந்த மரங்கள் சரிந்து விழுந்து விடாமல் இருக்க மிக அகண்ட அடிப்புறத்தினை அழகாக அமைத்து கொண்டிருந்தது. வேறு சில மரங்கள் பாறைகள் மலைகளை விட்டு கீழே விழுந்து விடாமல் பற்றிக் கொண்டிருந்தன. ஒரு இடத்தில் ஒரு பாறையின் மேல் இருந்து ஒரு சிறிய மரக்கன்று வளர்ந்து கொண்டிருந்தது. கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு என்று சொல்வார்களே அது உண்மையாக இருக்குமோ. மரங்கள் மண் அரிப்பை தடுக்கும் என்று படித்திருக்கிறேன். அது எப்படி என்பதை நேரில் காண முடிந்தது.
மலை உச்சியில் உருவாகும் தண்ணீர் எங்கெல்லாம் இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் பாதை அமைத்து கொண்டு வழிந்தோடிக் கொண்டிருந்தது. ஒரு சில இடங்களில் பாறைகளின் மேல் இருந்து அருவியாய் கொட்டி இசை நடனம் செய்தது. அகஸ்தியர் மலை கேரளாவில் இருக்கும் இரண்டாவது உயர்ந்த சிகரம் என்பதால் காலையில் ஆரம்பித்த நடை பயணம் மாலை வரை நீண்டு கொண்டே போனது. தாமிர பரணி ஆறு இங்கிருந்து தான் உற்பத்தியாகிறது.
மலை பயணம் செல்லும் போது மழை குளிர் போன்றவற்றை தாங்கும் திறன் கொண்ட ஆடைகளை எடுத்து செல்வது அவசியம். கீழே வெயில் தாக்குகிறதே என்று அலட்சியமாக சிகரம் ஏறினால் உச்சியில் எதிர்பாராமல் மழையும் குளிரும் வாட்டி வதைக்கும்.
காட்டு வழி எங்கும் வன விலங்குகளின் சாணம், கால்தடங்கள் பரவலாக இருந்தது. ஒரு சில இடங்களில் திடீர் என்று சல சலப்பும், காட்டுக்குள் உறுமல் சத்தமும் கேட்க பயணம் கொஞ்சம் திகிலாகத்தான் இருந்தது. அடர்ந்த காட்டுக்குள் செல்லும் போது குழுவாக செல்ல வேண்டும். குழுவை விட்டு பிரிந்து செல்ல கூடாது, சத்தம் எழுப்பாமல் அமைதியாக கடந்து செல்ல வேண்டும். ஒரே இடத்தில் அதிக நேரம் இருக்க கூடாது என்று நிறைய அறிவுரைகளை வன அலுவலகத்தில் எழுதி வைத்திருந்தார்கள். ஆங்காங்கே யானைகள் மரப்பட்டைகளை உரித்து சாப்பிட்டதற்கான தடையம் இருந்தது.
ஒவ்வொரு மூன்று கிலோ மீட்டர் தொலைவிலும் மிக பெரிய அகழிகள் தோண்டி நடுவே குடில் அமைத்து வாட்சர்கள் தங்கி வனத்தை காக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவர்களிடம் எந்த ஆயுதங்களும் இல்லை. இருக்கும் ஒரே ஒரு தற்காப்பு வன விலங்குகளை விரட்ட வெடி மட்டுமே. வீரப்பன் போன்று யாராவது வந்தால் காலில் விழுவது மட்டும் தான் தற்காப்பு. பாவம் நம் வனவர்கள்.
ஒவ்வொரு மலையிலும் அதன் புளோரா பானா (தாவரங்கள் விலங்குகள்) வெவ்வேறு விதமாக இருந்தது. முதலில் வானுயர்ந்து இருந்த மரங்கள் மலை ஏற ஏற காணாமல் போய் குறு மரங்களாக காட்சி கொடுத்தன. அதற்கும் மேல் புற்கள் மட்டுமே இருந்தன.
இருபது கிலோ மீட்டர்கள் நடந்த பின் அதிரி மலை வன கேம்புக்கு சென்று சேர்ந்தோம். அங்கே வனத்துறையினரால் பயணம் செல்பவர்கள் தங்குவதற்காக கான்கிரீட் கட்டிடம் ஒன்று கட்டபட்டிருந்தது. ஒரு இரண்டாயிரம் சதுர அடி இருக்கும் பழமையான கட்டிடம். காட்டுக்குள் இப்படி ஒரு தங்கும் இடம் கிடைத்ததே சொர்க்கமாக இருந்தது. அந்த கான்கிரீட் கட்டிடத்தின் எதிர்புறம் தகரத்தாலான குடில்கள் அமைக்கபட்டிருந்தன.
பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் இரவில் நல்ல மழை பொழியும் போது உள்ளே தொடர்ந்து மத்தளம் வாசிப்பது போன்று சத்தம் கேட்டு கொண்டே இருக்கும் என்பதால் அங்கே தங்குவது உசிதம் அல்ல. படுப்பதற்கு பாயும் காலை மதியம் இரவு உணவுகளும் கேரளா சமையல் முறைப்படி செய்து கொடுக்கிறார்கள். நாம் அங்கே சென்றவுடன் நமக்கான உணவை முன் பதிவு செய்து விட வேண்டும். அப்போது தான் நமக்காக சமைக்க ஆரம்பிப்பார்கள். இல்லாவிட்டால் பட்டினி தான்.24 மணி நேரமும் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பிடம் குளியல் அறை வசதி என்று அருமையாக இருக்கிறது.
நடந்து சென்ற களைப்பில் அப்படியே உறங்கி போனோம். சிறிது நேரம் கழித்து அருமையான ஒரு சுக்கு காப்பி கிடைத்தது, ரசித்து சுவைத்தோம். இரவு உணவு கேரளா ஸ்டைல் கஞ்சி, பயறு, பப்படம், ஊறுகாய் என்று கொடுத்து அசத்தினார்கள். மலை காட்டின் நடுவே சாப்பிடும் போது சுவை மேலும் கூடுதலாகத்தான் இருந்தது. மறுநாள் காலை அகஸ்தியர் மலை ஏற வேண்டும் என்பதால் எல்லோரும் விரைவில் உறங்க ஆரம்பித்தோம்.
அதிரி மலையை சென்று அடையும் போது மாலை சூரியன் வானத்தை செவ்வானமாக்கியிருந்தது. மறுநாள் ஏறப்போகும் அகஸ்தியர் மலை தூரத்தில் தெளிவாக காட்சி கொடுத்தது. அப்போது எங்களுக்கு தெரியவில்லை அன்று இரவே எல்லாம் தலை கீழாக மாறப்போகிறது என்று.
இரவு முழுவதும் இடி மின்னல் மழை என்று அதிரி மலையின் தட்ப வெட்ப நிலையை மழை கடுமையாக மாற்றி விட்டது. மறுநாள் காலை அகஸ்தியர் மலை ட்ரெக்கிங் ஆரம்பிப்பதற்கான எந்தவிதமான அறிகுறியும் இல்லை. வெளியே ரெயின் கோட் இல்லாமல் செல்ல முடியாத அளவுக்கு மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது.
கிரிக்கட் மேட்ச் மழையால் பாதிக்கபட்டால் எப்படி அடுத்த பிட்ச் இன்ஸ்பெக்சன் காலை 10.00 மணிக்கு மேல் நடுவர்களால் ஆய்வு செய்யப்படும் என்று அறிவிப்பார்களோ அது போன்று நிலைமை சீரனாவுடன் மேலே செல்ல அனுமதிக்க படுவீர்கள் என்று சொல்லி விட்டார்கள். காத்திருந்தோம். சென்ற முறை ஒரு பக்தர் குழுவினர் அதிரி மலையிலேயே 14 நாட்கள் அகத்தியரை காண முடியாமல் தங்கி இருந்ததாக சொன்னார்கள்.
நல்ல வேளை காலை 9.00 மணிக்கெல்லாம் மழை ஓரளவுக்கு குறைந்து விட்டிருந்தது. எல்லோரும் தயாராக இருந்ததால் எங்களுக்கான காலை உணவை வாங்கிகொண்டு உடனே நடக்க ஆரம்பித்தோம்.
வழியில் மூங்கில் காடுகள் அடிக்கடி மழை பொழிவதால் தள தளவென பசுமையாக இருந்தது. மூங்கில் குருத்துகள் யானைக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் நாங்கள் செல்லும் வழி தவிர்த்து அவைகள் வந்து போவதற்கென்று தனியாக வழி அமைத்து வைத்திருந்தன.
ஏசி காடுகள் என்று ஒரு காட்டுக்கு பெயர் வைத்திருந்தனர். குழு குழு என்று மொத்த காட்டையும் குளிரூட்டியது போல் இருந்தது.
ஒருமணி நேரத்திற்கும் மேலாக நடந்திருப்போம். எங்களுக்கு முன்னால் சென்றவர்கள் எல்லோரும் திரும்பி வந்து கொண்டிருந்தனர். எங்களை பார்த்து "மேலே போகாதீங்க, நிலைமை ரொம்ப மோசமா இருக்கிறது. புயல் வீசுகிறது" என்று ஒரு பிட்டை போட்டு விட்டு சென்று விட்டார்கள்.
"இமயமலையவே பார்திருக்கோமாம் இதெல்லாம் எம்மாத்திரம் எங்களுக்கு" என்று அவர்களுக்கு பதில் சொல்லி விட்டு மீண்டும் மேலே ஏற ஆரம்பித்தோம்.
"இமயமலையவே பார்த்திருக்காராம், எப்படி மேலே போறாருன்னு பார்கிறேன்" என்று அவர் தன்னுடன் வந்தவரிடம் சவால் விட்டுச் சென்றது என் காதுகளில் ஒலித்தது.
மேலே செல்ல செல்ல விசிபிலிட்டி ஜீரோ என்று சொல்வார்களே அப்படி நமக்கு முன்னால் செல்பவர்களே தெரியாத அளவு பனி மூடி பனி காத்து புயலாக வீசிகொண்டிருந்தது.
ஒரு இடத்தில் அருவி ஒன்று வேகமாக கொட்டி கொண்டிருந்தது. அங்கே முன்னால் போன எல்லோரும் நின்று கொண்டிருந்தனர். மற்றவர்கள் இறங்க ஆரம்பித்திருந்தனர். எங்கள் குழுவை சேர்ந்த ஒரு ஆறு பேர் ஏற்கனவே அங்கே பலமுறை சென்றவர்கள் இப்படி இருந்தால் வழுக்கு பாறையில் கயிறை பிடித்து ஏறும் போது காற்று அப்படியே நம்மை தூக்கி வீசி விடும் என்று மீதம் இருப்பவர்களுக்கு கிலியை கொஞ்சம் கொஞ்சமாக விதைத்து கொண்டிருந்தனர்.
அகஸ்தியருக்கு விரதம் இருந்து புனித யாத்திரை வந்திருந்த பெரும்பான்மையான ஆட்கள் திரும்பி ஓடி விட்டனர். தெய்வ நம்பிக்கையை விட தன்னம்பிக்கை முக்கியம் என்ற பகுத்தறிவு அப்போதுதான் கை கொடுத்தது.
என்னடா இது இப்படி பயணம் தடை படுகிறதே என்று கவலையாக இருந்தது எனக்கு.
"என்ன செய்யலாம்" என்று என்னிடம் நண்பர் டாக்டர் இளங்கோவன் என்னிடம் கேட்க "கொஞ்சம் பொறுத்து பார்க்கலாம் மலை சிகரங்களில் தட்ப வெட்ப நிலை அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்" என்று நான் சொல்லியும் அவரும் நரசிம்மனும் கீழே இறங்க ஆரம்பித்து விட்டனர். அவருக்கு முன்னால் திருவனந்தபுரத்தில் இருந்து எங்கள் குழுவில் இணைந்த நண்பர்கள் மூன்று பேரும் இறங்கி சென்று விட்டனர். 14 பேர் கொண்ட எங்கள் குழு இப்போது 8 பேர் கொண்ட குழுவாக குறைந்து விட்டது.
மேலே போகலாமா இல்லை கீழே இறங்கி சென்று விடலாமா என்று குழப்பத்தில் இருந்த என்னிடம் பரமத்தி வேலூரில் இருந்து வந்த நண்பர் சசி குமார் "செந்தில் அண்ணா என்ன செய்யலாம்" என்று கேட்க "முன் வைத்த காலை பின்னால் வைக்க கூடாது" என்று உற்சாகம் ஊட்டினேன். "என்ன ஆனாலும் சரி வாங்க போகலாம்" என்று முழங்கால் அளவு தண்ணீரை தாண்டி விறு விறு என்று நடக்க ஆரம்பித்தார். மீதமிருந்த ஏழு பேரும் அவரை பின் தொடர ஆரம்பித்தோம்.
தெய்வத்தால் ஆகாது எனினும் தன் மெய் வறுத்த கூலி தரும் என்ற வள்ளுவன் வாக்கு மெய்யாகி போனது.
இப்போது வழித்தடம் எல்லாம் மறைந்து பாறை மட்டுமே இருந்ததால் எங்கே எப்படி செல்வது என்று தெரியவில்லை. வனத்துறையினர் பாறைகளில் மஞ்சள் நிற பெயின்ட் அல்லது வெறும் கல்லால் கீறி ஆங்காங்கே அம்புக்குறி போட்டு வைத்திருந்தது வழி மாறாமல் இருக்க உதவி செய்தது. அந்த அம்பு குறியை பார்த்துக்கொண்டே நடக்க ஆரம்பித்தோம்.
மலை ஏறும் போது நான் எப்போதுமே கடைசியில் பயணிப்பதையே விரும்புவேன். என் முதுகுக்கு பின்னால் ஒருவர் நடந்து வருவதில் எனக்கு சிறிதும் உடன்பாடு இல்லை. ஒருவர் நம் முதுகுக்கு பின்னால் நடந்து வந்து கொண்டிருக்கும் போது நம் கவனம் முழுவதும் முன்னால் இருக்கும் பாதையில் மட்டுமே இருக்கும் இயற்கை காட்சிகளை ரசிப்பதில் கவனம் செலுத்த முடியாது. ஆனால் எங்கள் குழுவில் நான் எப்போதுமே கடைசியில் வருவதை வைத்து நான் ஒரு ஸ்லோ வாக்கர் அதாவது மெதுவாக நடக்க கூடியவர் என்று தவறாக கணித்து வைத்து உள்ளனர்.
சிறிது தூரம் நடந்த போது ஒரு பாறை மேல் ஒரு சிலை ஒன்று இருந்தது. அதன் கீழே ஒரு சிலர் சர்க்கரை பொங்கல் செய்து கொண்டிருந்தார்கள். அது ஆதிவாசிகள் கோவில் என்று பத்மஸ்ரீ விஜயகுமார் எங்களுக்கு விளக்கினார்.
அங்கே சென்று அவர்களிடம் பேசிய போது அவர்கள் சென்னையில் இருந்த வந்திருப்பதாகவும் ரெயில்வேயில் அக்கவுன்ட் பிரிவில் வேலை செய்வதாகவும் சொன்னார்கள். அவர்களிடம் உங்களுக்கு இளங்கோவனை தெரியுமா? என்று கேட்டால் தெரியாது என்று சொல்லிவிட்டார்கள் :) என்னடா இது எம்ஜியாரை தெரியுமா என்று கேட்டால் தெரியாது என்று சொல்பவர்கள் போல் அல்லவா இருக்குன்னு நினைச்சிகிட்டேன். அவர்களிடம் இருந்து விடை பெற்று மீண்டும் நடக்கலானோம்.
இது போன்று சவாலான பயணங்களில் எல்லாம் குழுவின் முன்னால் அனுபவம் மிக்க ஒருவரையும் கடைசியில் பேக் அப்புக்கு ஒருவரையும் நியமிப்பார் எங்கள் கேப்டன். இந்த பயணத்தில் முன்னால் செல்பவர் பாதி பயணத்தில் திரும்பி சென்று விட்டதால் அந்த பொருப்பை சசிகுமாரும் பத்மஸ்ரீ விஜயகுமாரும் ஏற்று கொண்டு அழகாக வழிநடத்தி சென்றனர். பின்னால் நண்பர் பிரதீப் பொறுமையாக கடைசியில் வருபவர் வரும் வரை காத்திருந்து கூட்டி சென்றது பயணம் வெற்றிகரமாக அமைய உதவியது.
Clif hanger என்ற ஒரு ஆங்கில படம் பார்த்திருக்கிறேன் பனிப்புயலில் சிக்கி படாத பாடு படுவார்கள். ஆனால் நிஜத்தில் அப்படி ஒரு அனுபவம் கிடைக்க பெற்றது நம்மை செழுமை படுத்தி கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாகவே நினைக்கிறேன்.
மேகங்கள் நம்மை தொட்டு போவதும் மின்னல்கள் நம்மை உரசி செல்வதும் அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைக்காது. காற்றின் வேகம் அதிகரிக்கும் போது ஒருவருடன் ஒருவர் கை கோர்த்து பிடித்து கொண்டோம். புயலுக்கு பின்னே அமைதி என்று சொல்வார்கள் சிறிது நேரத்தில் ஓரளவு மரங்கள் அடர்ந்திருந்த இடத்திற்கு வந்தவுடன் காற்றின் வேகம் எங்களை தாக்க முடியாமல் மரங்கள் கவசம் போட்டு கொண்டது.
மரங்கள் அடர்ந்த கானகத்தை தாண்டியவுடன் வழுக்கு பாறை என்று சொல்வார்கள் அங்கே ஒரே ஒரு பாறை செங்குத்தாக இருக்க மேலே செல்ல வேண்டும் என்றால் ராணுவ வீரர்கள் மலையில் இருந்து ஏற இறங்க பயன்படுத்தும் கயிறு முடிச்சு முடிச்சாக போட்டு கட்டி வைத்திருந்தார்கள்.
அப்படி செங்குத்தான பாறையில் எப்படி எருவோமோ என்று நினைத்த போது பத்மஸ்ரீ விஜயகுமாரும் சசிகுமாரும் மளமளவென்று மேலே ஏறி சென்று இப்படித்தான் ஏற வேண்டும் என்று எங்களுக்கு காட்டி கொடுத்தார்கள்.
உடல் எடை முழுவதும் பாறையின் மேல் அழுத்தி கீழே விழுந்து விடாமல் இருக்க மட்டும் கயிறை பிடித்து கொண்டால் எளிதில் மேலே ஏறி செல்ல முடிகிறது. காற்று வேகமாக அடித்ததால் கொஞ்சம் சிரமமாக இருந்தது. ஆனால் மேலே சென்று சேரும் வரை த்ரிலிங்காக இருந்தது.
பாறையின் மேல் ஏறி முடித்தவுடன் அகஸ்தியரை தேடினால் காணவில்லை. பத்மஸ்ரீ விஜயகுமாரிடம் "எங்கப்பா வழுக்கு பாறை ஏறியவுடன் அகஸ்தியர் இருக்கும் இடம் வந்து விடும் என்று சொன்னீங்க இன்னும் காணோமே?" என்ற கேள்வி அங்கே முதல் முறை செல்லும் என்னை போன்றவர்களிடம் இருந்து கேட்கப்பட்டது.
அவரும் சிரித்து கொண்டே இதே மாதிரி இன்னுமொரு பாறை இருக்கு அதை ஏறி சென்றால் உடனே வந்து விடுவார் அகஸ்தியர் என்று பதில் சொல்லி விட்டு அடுத்த கேள்வியை எதிர்பாராமல் மேலும் பாறைகளாக இருந்த மலையை கடந்து செல்ல ஆரம்பித்தார்.
மறுபடியும் ஒரு பதினைந்து நிமிடங்கள் கழித்து அடுத்த வழுக்கு பாறை எதிர் கொண்டது. அதிலும் பாறை கயிறு முடிச்சு முடிச்சாக தொங்க விடப்பட்டிருந்தது. ஏற்கனவே அனுபவம் இருந்ததால் இந்த முறை அடுத்த செய்முறை விளக்கத்திற்கு காத்திராமல் சசிகுமாருடன் மளமளவென்று மேலே ஏறி செல்ல ஆரம்பித்தேன்.
மேலே ஏறி சசியும் நானும் கொஞ்ச தூரம் தான் சென்றிருப்போம். இதோ வந்தாச்சு அகஸ்தியர் தெரிகிறார் பாருங்கள் என்று உற்சாக கூக்குரல் எழுப்பினார் விஜய். எல்லோருக்கும் அந்த ஆனந்தம் பற்றி கொண்டது. ஓ.....வென மகிழ்ச்சியின் உச்சம் தொட்டு விட்டோம். கடல் மட்டத்தில் இருந்து 1868 மீட்டர்கள் உயரத்தில் தென் இந்தியாவின் உயரமான சிகரங்களில் ஒன்றின் மேல் இருக்கிறோம் என்ற மகிழ்ச்சி மேகங்கள் வந்து உரசும் ஆனந்தம் விவரிக்க வார்த்தைகளே இல்லாமல் போனது.
அங்கே குட்டியாக ஒரு சிவலிங்கமும் எதிரே நந்தியும் இருந்தது. சற்று தள்ளி குறுமுனி என்றழைக்கப்படும் அகஸ்தியரின் இரண்டடி சிலை ஒன்றும் இருந்தது. எங்களுக்கு முன்னாள் வந்த சிலர் அந்த அகஸ்தியரின் சிலையை சுத்தம் செய்து தேனும், சந்தனம் மற்றும் விபூதி அபிசேகங்கள் செய்து கொண்டிருந்தனர். எங்கள் குழுவில் வந்திருந்த பக்திமான்கள் எல்லோரும் அந்த பூஜையில் கலந்து கொண்டு எங்களுக்கு பிரசாதமும் வாங்கி வந்து கொடுத்தனர்.
சிகரம் தொட்ட மகிழ்ச்சியில் மேலும் ஒரு மகிழ்ச்சி விஜயும் பிரதீப்பும் தேசிய கொடியை எடுத்து வந்திருந்தனர். அந்த உயரமான இடத்தில் நின்று கொண்டு நம் தேசிய கொடியை தூக்கி பிடிக்கும் போது இந்தியன் என்ற திமிரு தோள்களில் தினவு எடுக்கத்தான் செய்கிறது.
அகஸ்தியர் கூடம் ஏறும் எல்லோருக்கும் எல்லா அனுபவங்களும் கிடைப்பதில்லை. முழுவதுமாக மேகமூட்டங்களில் நடந்து சென்றதால் எங்களுக்கு மலையை சுற்றி என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை. அனால் எங்களுக்கு பின்னால் சென்ற எங்கள் டிவைன் ட்ரெக்கர்ஸ் குழுவினர் மலையை சுற்றி அருமையான காட்சிகளை படமாக்கி வாட்சப்பில் எங்களுடன் பகிர்ந்து கொண்டனர். ஆனால் அவர்களுக்கு இது போன்ற மேகமூட்டங்களுக்கு நடுவில் நடந்து சென்ற அனுபவங்கள் கிடைக்கவில்லை.
இப்படி ஒவ்வொரு முறையும் வேறு வேறு விதமாக காட்சி கொடுக்கும் இந்த மலை என்ற காரணத்தினால் கடைசி குழு பயணம் முடிக்கும் வரை படங்களை பகிர வேண்டாம் என்று எங்கள் கேப்டன் கேட்டு கொண்டதற்கு இணங்க மொத்த குழுவும் பயணம் முடிக்கும் வரை படங்கள் எதுவும் பகிரப்படவில்லை.
மேலே இருக்கும் குறுமுனி அகஸ்தியரின் சிலைக்கு அங்கே செல்லும் பக்தர்கள் செய்யும் அலங்காரங்களும் சிறப்பாக இருக்கிறது. ஒரு குழுவினர் அப்படியே அகஸ்தியர் தத்ரூபமாக நின்று கொண்டிருப்பது போன்றே அலங்காரம் செய்து வணங்கி சென்று இருந்தனர்.
இப்படி ட்ரெக்கிங் செல்லும் போது இயற்கையின் ஒவ்வொரு அறிய படைப்பினையும் நிதானமாக பார்த்து அனுபவித்து தெரியாத தெரிந்த விசயங்களை உடன் வருபவர்களுடன் பகிர்ந்து கொண்டு செல்வது என்பது பயணத்தை மேலும் சிறப்பாக்கும்.
என்னுடன் பயணித்த சசிகுமார், விஜயகுமார், பிரதீப், டாக்டர் இளங்கோவன், கருனைசாமி, நரசிம்மன், கிரிஷ்ணகுமார், கோபாலகிருஷ்ணன், ஆறுமுகம், சுபாஷ், கணேசன், வெங்கடேசன் மற்றும் ராஜேஷ். இவர்களின் துணை இல்லாமல் இவ்வளவு பெரிய பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு இருக்க முடியாது.
எங்கள் கேப்டன் மற்றும் வைஸ் கேப்டன் ராஜீவ் மற்றும் குமரேசனுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
மீண்டும் இன்னுமொரு பயணத்தில் சந்திக்கிறேன்
பிப்ரவரி 17, 2016 காலை 8.00 மணி

பிப்ரவரி 18, 2016 காலை 7.00 மணி